• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) முறைகேடுகளை கண்டித்து, கண்டன போராட்டம்

ByG.Suresh

Mar 7, 2024

சிவகங்கை பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பாக சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பத்திர திட்ட விவகாரத்தில் பா.ஜ.க விற்கு
சாதகமாக செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) முறைகேடுகளை கண்டித்து கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டன சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சஞ்சய்காந்தி உள்ளிட்ட ஏராளமானூர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது..,
தேர்தல் பத்திர விபரங்களை வெளியிட வேண்டும் யாரிடமிருந்து யார் நன்கொடை வாங்கினார்கள் என்பது தெரிய வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
பாரத ஸ்டேட் வங்கி மட்டும் தான் தேர்தல் பத்திரத்தை வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளது ஆறாம் தேதிக்குள் விவரங்களை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பாரத ஸ்டேட் வங்கி நாலு மாத காலம் அவகாசம் கேட்டு அபிடவிட் தாக்கல் செய்தது வேடிக்கையாக உள்ளது மொத்தம் 22 ஆயிரம் பரிவர்த்தனை தான் நடந்துள்ளது அனைத்தும் கம்ப்யூட்டரைஸ்டு ஆன நிலையில் தேர்தலை மையமாக வைத்து தேர்தலுக்குப் பின்னர் விவரங்களை கொடுக்க வேண்டும்போன்ற அதற்கு முன்னதாக வந்தால் பாஜகவை பாதிக்கும் யாரிடமிருந்து பணம் பெற்றார்கள் என்பதெல்லாம் தெரிந்து விடும் என்ற அச்சத்தில் இவ்வாறு கூறியதாகவங்கி மீது குற்றம் சாட்டினார் .மக்கள் வரிப்பணத்தில் வங்கி நடைபெற்று வரும் பொழுதுமக்களுக்கு உண்மையாக இருந்து வெளியிட்டு இருக்க வேண்டும் என்றார்.

எல்லாம் கணினி மையம் ஆகிவிட்டது டிஜிட்டல் இந்தியா என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இந்த கணக்கு மட்டும் கால தாமதப்படுத்துவது ஏன் என்றார். காங்கிரஸுக்கு கொடுத்த விவரங்களையும் வெளியிடுங்கள் அதைப் பற்றி கவலை இல்லை நாங்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இல்லை பிரதிபலன் பார்த்து நன்கடை கொடுத்தது யாருக்கு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் வருமான வரி நோட்டீசால் பாதிக்கப்பட்டவர்கள் நன்கொடை கொடுக்கிறார்கள் என்றால் பிரதிபலனை எதிர்பார்த்து தானே கொடுக்கிறார்கள் என்றார். ஆட்சியில் இல்லாத கட்சிக்கு நன்கொடை வருவதும் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு நன்கொடை வருவதற்கும் வேறுபாடு உண்டு என்றும் கார்த்திக் சிதம்பரம் பேட்டியளித்தார்.