• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? அல்கா தம்பா கருத்து.

நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில். சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில்.”பெண்களுக்கான நீதி_நாங்கள் தயார்” என்னும் மகளிர் மகாநாடு தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் நடக்கும் நிலையில், இந்த காங்கிரஸ் கட்சியின் மகளிர் விழாவில் சிறப்பு விருந்தினராக, அகில இந்திய மகளிர் காங்கிரஸ்யின் தேசிய தலைவி அல்கா தம்பா பங்கேற்க வந்தவர்.

மாநாடு நிகழ்வில் பங்கேற்பதற்கு முன் நாகர்கோவிலில், குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்தின் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

இளம் தலைவர் ராகுல் காந்தியின், இந்திய வரலாறு பதிவு செய்துக் கொண்டுள்ள பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். எங்கள் இளம் தலைவர் ராகுல்காந்தியின் பாத சுவடுகள் படிந்த இடத்திற்கு வந்துள்ளதில் பெருமிதம் கொள்கிறேன். இன்றும் எங்கள் தலைவர் நியாய யாத்திரை என்பதை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

பிரதமர் மோடியின் 10_ஆண்டு ஆட்சியில் இந்திய முழுதும் அதன் எட்டு திசைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பின்மை, பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவினர் பற்றிய அவர்களின் புகைப்படத்துடன் ஒரு பதிவை நாகர்கோவிலில் நடைபெறும் பெண்கள் மாநாட்டில் வெளியிடுகிறோம்.

தென்கோடி முனையில் வெளியிடும் இந்த பதாகையை, இந்திய மகள்கள், அன்னையர்கள் நாடு முழுவதும் பரப்ப இருக்கிறார்கள்.

தென்னக மாநிலங்கள் ஆன கர்நாடக,தெலுங்கானாவில் காங்கிரஸ் தொடங்கி வைத்துள்ள இந்த வெற்றியை இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களை சந்தித்து கடந்த மோடியின் 10_ஆண்டு ஆட்சியில் ரெக்கை கட்டி உயரும் விலைவாசி,படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இன்மையை, மகளிருக்கு பாதுகாப்பு இன்மையை எடுத்து செல்லும் பணியில் இந்தியாவின் மகளிர் சக்தி எடுத்து செல்லும்.

தமிழகத்தில் காங்கிரஸ் ,திமுக, மற்றும் கூட்டணி கட்சிகளின் வலிமையான ஒற்றுமை தமிழகத்தில் எங்கள் கூட்டணி மகாத்தான வெற்றியை பெறுவோம். தமிழ் மொழியின் தொன்மையை அதன் இலக்கண, இலக்கிய வளத்தை போற்றுவது பிரதமர் மோடிக்கு ஏற்புடையாதாக இல்லை. காங்கிரஸ் பேர் இயக்கம் தமிழகத்தின், தமிழக மக்களின் மொழி பற்றை மதிக்கிறோம், போற்றுகிறோம் என தெரிவித்தார்.

மோடியின் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் பெண்களுக்கான 33_சதவீதம் உரிமையை சட்டம் ஆக்கவில்லை.

நடைபெறும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மகளிருக்கான ஒதுக்கீட்டை 50_சதவீதம் உயர்த்தி சட்டமாக்குவோம்.

இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக கேட்கும் கேள்வி எங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்று.?

இந்தியா கூட்டணி 400_க்கும் அதிகமான இடங்களில் வொற்றி பெற்று. இந்தியாவின் பெரும்பான்மை வாக்காளர்கள் தரும் அபரீத ஆதரவுடன் இந்திய பிரதமரை தேர்ந்தெடுப்போம் என்றவரிடம். காங்கிரஸ்யில் பெண்களுக்கு உயர் பதவி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டி விஜயதரணி பாஜகவுக்கு போய் விட்டரோ என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு. அகில இந்திய காங்கிரஸ் மகளிர் தேசிய தலைவி அல்கா லம்பா தெரிவித்த பதில். இங்கு இருக்கும் நான் உட்பட்ட பெண்களை காங்கிரஸ் மதிக்கிறது,போற்றி பாராட்டுகிறது என்பதற்கு நாங்களே உங்கள் கண் எதிரே உள்ள சாட்சிகள் என தெரிவித்தார்.