• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிங்கம்புணரி அருகே நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற மீன்பிடி திருவிழா

ByG.Suresh

Mar 2, 2024

சிங்கம்புணரி அருகே நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற மீன்பிடி திருவிழா. ஓட்ரா, ஓட்ரா, கண்மாயில் இறங்கி மீன புடிடா என ஊத்தா கூடையுடன் போட்டிப் போட்டுக் கொண்டு ஓடி ,கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிச் சென்ற கிராம மக்கள் .

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வெளுத்துக்கரைப்பட்டி தனக்கங்கண்மாயில் மழைவரம் வேண்டியும், விவசாயம் செழித்தோங்கவும், மீன்களை பிடித்து செல்ல சமூக வலைதளங்களிலும் ,சுற்றுவட்டார கிராம மக்களுக்கு அறிவிப்பு செய்தனர்.அதனையடுத்து இன்று மாலை நேரத்திற்கு முன்பு சிங்கம்புணரி, எருமை பட்டி ,சூரக்குடி ,முத்துசாமி பட்டி, மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் மீன்களை பிடிக்க. ஊத்தா கூடையுடன் ஓடி கண்மாயில் இறங்கி மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனர் இதில் இவர்களுக்கு விரால், சிலேபி, கெண்டை உள்ளிட்ட அதிக ருசியான நாட்டுவகை மீன்கள் கிடைத்ததால் அனைவரும் சந்தோசமாக வீடு திரும்பினர்.