• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

ByN.Ravi

Mar 2, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, ராயபுரத்தில் அமைந்துள்ள
கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் “தேசிய அறிவியல்” தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் ‘சமூக விழிப்புணர்வை’ ஏற்படுத்தும் வகையில் “ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கண்காட்சி”
பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும், பள்ளி நிறுவனத் தலைவர் செந்தில் குமார், பள்ளியின் தாளாளர் குமரேசன்,
உதவித்தலைமை ஆசிரியர் அபிராமி , மற்றும் டயானா,ஒருங்கிணைப்பாளர்கள் சுபா மற்றும் . ரெய்ஹானா பேகம் கலந்து கொண்டனர் .
மேலும், சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்.மயில் முருகன்(வணிகவியல் துறை இணைப்
பேராசிரியர், மதுரா கல்லூரி. ) மற்றும் டாக்டர். தினகரன் (விலங்கியல் துறை ,ஆராய்ச்சி மேற்பார்வையாளர் மற்றும் துறை தலைவர், மதுரா கல்லூரி) டாக்டர்.கிருஷ்ண ஜோதி(சமயம்,சமூகம் தத்துவவியல் துறை, அமெரிக்கன் கல்லூரி, மதுரை.) வித்யாலட்சுமி (உதவி பேராசிரியர், சமூகவியல் துறை , லேடி டோக் கல்லூரி மதுரை.)
டாக்டர்.அமல்ராஜ் (உதவி பேராசிரியர், வேதியியல் துறை, அருளானந்தர் கல்லூரி, மதுரை,) இவர்களுடன் சிறப்பு விருந்தினராக செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கிவைத்து, மாணவர்களின் படைப்புகளை ஆராய்ந்து பரிசுகள் வழங்கினர் .
இவ்விழாவில், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு, ரொபாட்டிக்ஸ்,சுற்றுச்சூழல், இயற்பியல், வேதியியல், உயிரியல், பாடத்தின் வரலாற்று நிகழ்வுகள், பண்டைய நாகரிகம், புவியியல்,அரசியல் மற்றும் சட்ட அமைப்புகள் ஆகிய தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிப் படுத்தி இருந்தனர்.
இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர் .
இக்கண்காட்சியில், மாணவர்கள் சிவன், பார்வதி, முருகன், விநாயகர் போன்றும் மகாபாரதக் காட்சிகளை யும் வீரப்பெண்மணிகளான வேலு நாச்சியார், ஜான்சி ராணி இலட்சுமி பாய், பத்மாவதி , ராதை, கிருஷ்ணர் போன்றும் வேடமணிந்து வந்தது அனைவரையும் கவர்ந்தது.