• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கார்கள் நேருக்கு, நேர் மோதல். தந்தை, மகன் பலி, 6 பேர் காயம்.

ByG.Suresh

Feb 26, 2024

சிவகங்கை நேரு பஜார் பகுதியை சேர்ந்தவர் ஹசீப் இவர் தனது குடும்பத்துடன் காரில் மதுரை சென்றுவிட்டு மீண்டும் சிவகங்கை நோக்கி சென்றுள்ளார். அதே நேரத்தில் மதுரை பி.பி.குளம் பகுதியை சேர்ந்த தலைமை தபால் நிலையத்தில் மக்கள் தொடர்பு ஆய்வாளராக பணிபுரியும் இக்னிசியஸ் ரோசாரியோ தனது 13 வயது மகனான

ஜோனாத்தனுடன் தேவகோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக தனது காரில் வந்து மீண்டும் சிவகங்கை வழியாக மதுரை நோக்கி சென்றுள்ளார். இருவரது கார்களும் திருமாஞ்சோலையை அடுத்துள்ள கீரனூர் விளக்கு அருகே நேருக்கு, நேர் மோதிக்கொண்டது. இதில் இக்னிசியஸ் ரோசாரியோ மற்றும் அவரது 13 வயது மகன் ஜோனாத்தன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மற்றோரு காரில் வந்த ஹசீப்பின் குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் படுகாயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உயிரிழந்த இருவரது உடலையும் பூவந்தி காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன் விபத்து குறித்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.