• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

“கழுமரம்” திரைவிமர்சனம்

Byஜெ.துரை

Feb 22, 2024

யுவர்பேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ் கே.கிருஷ்ண ராஜு தயாரித்து
கொட்டாச்சி இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம்”கழுமரம்”

இத்திரைப்படத்தில் பாண்டி செல்வம், தமிழ் பாரதி, திருப்பாச்சி பெஞ்சமின், கர்ணன் ஜானகி, சத்யேந்திரன், உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். தனது சொந்த கிராமத்தில் தியேட்டர் போஸ்டர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார் கொட்டாச்சி.

தானும் சொந்தமாக ஒரு திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னையை நோக்கி வருகிறார். சென்னையில் உள்ள ஒரு தயாரிப்பாளர் கொட்டாச்சியின் கதையை பிடித்து போக படம் தயாரிக்க முன் வருகிறார்.

ஆனால் ஒரு கண்டிஷன் போடுகிறார் கொட்டாச்சியிடம்
படத்தை வேறொரு இயக்குனர் இயக்க வேண்டும் என்று கூற
இதற்கு மறுப்பு தெரிவித்தார் கொட்டாச்சி.

அதன் பின்னர் அதே தயாரிப்பாளரின் நண்பர் கொட்டாச்சியின் படத்தை தயாரிக்க விருப்படுகிறார். இதனால் அந்த தயாரிப்பாளருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.

படத்தை தடுக்க பல முயற்சிகளை செய்கிறார். இறுதியில் கொட்டாச்சி தான் வைத்திருந்த கதையின் படத்தை இயக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கொட்டாச்சி தனது முழு நடிப்பு திறமையயும் கொடுத்துள்ளார். ரோஷன் மதேவ்ஸ் இசை அருமை

கிரிதரன், ராஜதுரை ஆகியோர்கள் தங்களால் முடிந்த அளவு ஒளிப்பதிவு செய்துள்ளனர்
மொத்தத்தில்”கழுமரம்” திரையில் பார்க்க வேண்டிய படம்.