• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஈரோடு கால்நடைத் தீவன உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு

Byமதி

Nov 1, 2021

ஈரோட்டில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் எஸ்.கே.எம். நிறுவனம். பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவரும் இவர்களது நிறுவனங்களுக்கு 5 நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

எஸ்.கே.எம் மயிலானந்தன், அவரது மகன்கள் சந்திரசேகர், சிவகுமார் ஆகியோருக்குச் சொந்தமான எஸ்.கே.எம். நிறுவனம், அப்பெயரில் கால்நடை தீவனம் மற்றும் உணவு தயாரிக்கும் ஆலை, சமையல் எண்ணெய் நிறுவனம், முட்டை பவுடர் உற்பத்தி ஆலை, முட்டை ஏற்றுமதி ஆகியவற்றை நடத்தி வருகிறது. கடந்த புதன் கிழமையன்று எஸ்.கே.எம். நிறுவன அலுவலகங்கள், அவற்றின் உரிமையாளர்களின் வீடு, மருந்தகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையைத் தொடங்கினர். வரி ஏய்ப்பு குறித்த புகார்களின் பேரில் சோதனை நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.

5 நாள்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்த ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள், ஈரோடு பெரியார் நகரில் உள்ள வீட்டில் வைத்து சரிபார்த்தனர்.