• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே பரிசல் மூலம் நெல் அறுவடை செய்யும் விவசாயிகள்

ByKalamegam Viswanathan

Feb 18, 2024

சோழவந்தான் அருகே முதலைக்குளம் ஊராட்சி கொசவபட்டி கிராமத்தில் கருப்பு கோவில் கண்மாய் அருகே நீர் பிடிப்பு பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதில்தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கால்வாயில் வரக்கூடிய தண்ணீர் நெற்பயிர்களுக்குள் பெருக்கெடுத்து ஓடுவதால் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலையில் உள்ளது. இதனால் நிலத்தில் பயிரிட்ட விவசாயிகள் அக் கிராமத்தில் உள்ள பரிசல்மூலம் மீன்பிடிக்கக்கூடிய சுசிதரணிடம் பரிசல் வாங்கி தங்கள் நிலத்தில் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை அறுவடை செய்து பரிசல் மூலம் களத்திற்கு கொண்டு வருகின்றனர்.