• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையத்தில் புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ByKalamegam Viswanathan

Feb 17, 2024

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தீயணைப்பு நிலையம் கட்டிடம் சேதமடைந்து இருந்த நிலையில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு 2.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்ற நிலையில் இன்று புதிதாக கட்டப்பட்ட தீயணைப்பு நிலையத்தை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார் .

புதிய கட்டிடத்தில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் சிங்கராஜ் மற்றும் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் விவேகானந்தன் ஜெயக்குமார் வருவாய் கோட்டாச்சியர் விசுவநாதன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.

இராஜபாளையம் வட்டாட்சியர் ஜெயபாண்டி தீயணைப்பு துறை அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.