• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக கவுன்சிலர்

ByKalamegam Viswanathan

Feb 11, 2024

விருதுநகர் நகராட்சி அமமுக கவுன்சிலர் உட்பட அமமுக மற்றும் பிஜேபி கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாற்றுகட்சியினர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர்.

விருதுநகர் அதிமுக நகர செயலாளர் டி.பி.எஸ்.வெங்கடேஷ் ஏற்பாட்டின் பேரில் விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்டச் செயலாளரும், விருதுநகர் நகராட்சி 6வது வார்டு கவுன்சிலருமான ராமச்சந்திரன் தலைமையில் அமமுக 5வது வார்டு செயலாளர் அழகுராஜா, துணைச் செயலாளர் விக்னேஸ்வரன், 6வது வார்டு துணைச்செயலாளர் கேசவன், பாஜக 6வது வார்டு கிளைத் தலைவர் பரமசிவம் மற்றும் விருதுநகர் தெற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் கலைவாணன் ஏற்பாட்டின் பேரில் விருதுநகர் அமமுக ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், தெற்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சுந்தரமூர்த்தி, சூரம்பட்டி கிளைச் செயலாளர் ராஜகணபதி, திமுக பிரமகர் அய்யனார் உட்பட 100க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்டகழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிமுக உறுப்பினர் படிவம், அதிமுக சால்வை அணிவித்து வரவேற்றார். சிவகாசி மாநகர் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட அம்மா பேரவை கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.