• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் 1000_ம் ஆண்டுகள் புராதன குகநாதீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகம்.

கன்னியாகுமரியில் மிகவும் பழமையான 1000_ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு,20 ஆண்டுகளுக்கு பின் பராமரிப்பு பணிக்கு ரூ.40_லட்ச நிதியும், கும்பாபிஷேகத்திற்கு ரூ.10_லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2023-2024, சட்டசபை அறிவிப்பின் படி கும்பாபிஷேக திருப்பணிக்கு, முதல்கட்டமாக உபயதாரர்கள் மூலம் ரூ.25_லட்ச்சத்தில் .தரைத்தளம், கருவரை விமான திருப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது என குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் செய்தியாளர்கள் இடம் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் பழமையான குகநாதீஸ்வரர் கோவிலுக்கு தினம் தோறும் அதிக எண்ணிக்கையில் ஆன சுற்றுலா பயணிகள் வந்து இங்கு கோவில் மூலஸ்தானத்தில் உள்ள 5 அடி உயர சிவலிங்க சிலையை தரிசித்து செல்வது வாடிக்கை.

கும்பாபிஷேகம் திருப்பணியின் தொடக்க விழா பூஜை இன்று காலை நடைபெற்றதுடன், சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகளும் நடை பெற்றது.

நிகழ்வில் குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குகநாதீஸ்வரர் கோவில் பக்த்தர்கள் பேரவை தலைவர் கோபி, திருக்கோவில்களின் உதவி கோட்டபொறியாளர் மோகன்தாஸ், பொறியாளர் ராஜ்குமார், முன்னாள் பணிப்பாளர் ஜீவா, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மற்றும் ஏராளமான பக்தர்கள் இன்றைய நிகழ்வில் பங்கேற்றனர்.