• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு வளாகத்தில் மரக்கன்றுகள் விதைத்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

ByKalamegam Viswanathan

Jan 28, 2024

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மேலூர் வட்டார வள மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில் ..,

அவ்வபோது எனது தனிப்பட்ட சேமிப்பில் மரக்கன்றுகளை வாங்கி பராமரிப்பு உறுதிமொழி பெற்று அரசு வளாகங்கள் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளில் அவர்கள் கரங்களால் நட வைக்கிறேன்.

அந்த வகையில் மேலூர் வட்டார வள மைய அதிகாரிகள் மரங்கள் வளர்த்து பராமரிக்க ஆர்வம் காட்டினர். குடியரசு தின விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கீதா மற்றும் அலுவலர்களிடம் மரக்கன்றுகளை வழங்கினேன்.

அதனை அவர்கள் ஆர்வமுடன் என் முன்னிலையிலேயே அந்த வளாகத்தில் நடவு செய்தது மன நிறைவாக இருந்தது என்றார். நிகழ்ச்சியில் மூத்த சிறப்பு பயிற்றுநர் டேனியல் தனசீலன், ஆசிரியர் பயிற்றுநர் ஜான்சன், இயற்கை ஆர்வலர்கள் ரமேஷ்குமார், சசிகுமார் மற்றும் சந்திரன் கலந்துகொண்டனர்.