பாலத்தில் பாதியில் பழுதான நின்ற அரசு பேருந்து அவசர அவசரமாக பயணிகளை இறக்கிய ஓட்டுனர் பின்னோக்கிய வந்த அரசு பேருந்து
மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து(TN58N2331) என் கொண்ட அரசு பேருந்து காளவாசல் வழியாக போடி லயன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பாலத்தின் மேலே ஏறும் பொழுது திடீரென பேருந்து கிளட்ச் திடீரென பழுதானது ஓட்டுனர் துரிதமாக செயல்பட்டு பிரேக்கை மட்டும் பிடித்துக் கொண்டு பயணிகளை உடனடியாக கீழே இறங்கி சொல்லி மாற்று பேருந்தில் பயணிகளை அனைவரையும் அனுப்பி வைத்து பிரேக் மட்டும் உபயோகித்து வைத்து கிளட்ச் வேலை செய்யாததால் மெதுவாக பாலத்திலிருந்து பின்னோக்கிய வாகனத்தை கீழே இறக்கினார். பயணிகள் கூறுகையில் பாலத்தில் ஏறும் பொழுது பேருந்து கிளட்ச் பழுதாகி நின்றது. மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியதாகவும், பாலத்தின் இறக்கத்தில் சென்றிருந்தால் கியரை மாற்றுவதற்கு மாற்ற கிளட்சை பயன்படுத்தாமல் எப்படி மாற்றுவார் விபத்து ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் இந்த உயிருக்கு யார் உத்திரவாதம் என ஆதங்கம் தெரிவித்தனர். ஒரு பேருந்து பணிமனையில் இருந்து வெளியே வரும் பொழுது வாகனத்தில் அனைத்து உபகரங்களும் சரியாக உள்ளதா என சரி பார்த்து வாகனத்தை இயக்க வேண்டும் எனவும், பயணிகளின் உயிர்களுடன் விளையாடாமல் அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. உயிர் காக்க உரிய பாதுகாப்புடன் அரசு பேருந்து இயக்கப்படுமா????
பாலத்தில் பாதியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து





