• Sun. Mar 16th, 2025

உசிலம்பட்டியில் மர அறுவை மில்லில் பதுங்கி இருந்த 3 அடி நீள விஷப்பாம்பை வன உயிரின பாதுகாப்பு குழுவினர் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்…

ByP.Thangapandi

Jan 22, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டு பேரையூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன்., இவர் மர அறுவை மில் நடத்தி வரும் சூழலில் இவரது மர அறுவை மில்லுக்குள் பாம்பு ஒன்று பதுங்கி இருந்து கொண்டு பணிக்கு வருபவர்களையும், அவ்வழியாக செல்லும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருவதை அறிந்து, உசிலம்பட்டி சிவாலயம் வன உயிரின பாதுகாப்பு குழுவினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த சிவாலயம் வன உயிரின பாதுகாப்பு குழுவினர் மர அறுவை மில்லில் பதுங்கி இருந்த சுமார் 3 அடி நீளமுள்ள அதிக விஷத்தன்மை வாய்ந்த கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.

மர அறுவை மில்லில் இருந்து மீட்கப்பட்ட பாம்பை உசிலம்பட்டி வனச்சரக வனக் காப்பாளர் சரவணனிடம் ஒப்படைத்த சூழலில் வனத்துறையினர் மீட்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்கு சென்று விடுவித்தனர்.