• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தனியார் கோவில்களில் ஒளி பரப்பலாம்.., உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Byவிஷா

Jan 22, 2024

ராமர்கோவில் கும்பாபிஷேகத்தை தனியார் கோவில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஒளிபரப்ப காவல்துறை அனுமதி தேவையில்லை என்றும், கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவித்து உரிய கட்டுப்பாடுகளுடன் ஒளிபரப்பலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள ராமர் கோயில் திறப்பு விழா இன்று வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இந்த கோவிலுக்கான கும்பாபிஷேகத்திற்கான 7 நாள் பூஜைகள் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயில் கருவறையில் 51 அங்குலம் குழந்தை ராமர் சிலை கடந்த வெள்ளிக்கிழமை நிறுவப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான விழாவின் நேரலைக்கு போலீசார் தடை விதித்ததை எதிர்த்து விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட்டது. இதில், தனியார் கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை செய்ய அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலை ஒளிபரப்பு செய்ய தடைவிதித்த தமிழக அரசுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தனியார் கோயில்கள், திருமண மண்டபங்களில் நேரலை செய்ய போலீசார் அனுமதி தேவையில்லை.
அறநிலையத்துறை கோயில்களில் நேரலை, பூஜை செய்ய கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும் என்றும், கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.