• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையத்தில் நாளை பிரதமர் மோடி வருகை.., எட்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ByKalamegam Viswanathan

Jan 20, 2024

மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நான்கு துணை ஆணையர்கள் எட்டு உதவி ஆணையர்கள் அடங்கிய 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி நாளை வருகை முன்னிட்டு விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் சோதனைக்கு பின் ஐந்தாவது லைன் வழியாக பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய உள்வளாகம், ஓடுபாதை மற்றும் விமான நிலைய வெளிவளாகம் அதிவிரைவு அதிரடிப்படை மற்றும் விமான நிலைய நுழைவாயில் ஆகிய பகுதிகளில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை ஐந்து அடுக்கு பாதுகாப்பு பணியிலும், விமான நிலைய நுழைவாயில் பகுதி விமானநிலைய வாகன நிறுத்துமிடம், மற்றும் பயணிகள் கூடும் இடம் , விமான நிலையை பின்புறம் நான்கு வழிச்சாலை ஆகியவற்றில் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் தமிழக போலீசாரும் இணைந்து எட்டடுக்கு பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு தடிப்பு போலீசார் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு வரவழைக்கப்பட்டு விமான நிலையம் வழங்கும் முழுவதும் தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விமான நிலைய வளாகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்கள் விமான நிலைய ஐந்தாவது நிலை வாயில் வழியாக சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுவார் என காவல்துறையினர் கூறினர்.