• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பள்ளி வாகனமும் எரிவாயு சிலிண்டர் வேனும் மோதல்..! குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய நகரமன்ற தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர்…

ByG.Suresh

Jan 20, 2024

சிவகங்கை மாவட்டம் சோழபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது. அருகே உள்ள ஒக்கூரில் அதிகளவு மாணவர்கள் படிப்பதால் பள்ளியின் வேன் அப்பகுதி மாணவர்களையும் அழைத்து வருவது வழக்கம். இந்த சூழலில் இன்று காலை எப்போதும் போல ஒக்கூர் பகுதி மாணவர்களை அழைத்துக் கொண்டு ஒக்கூர் பகுதியில் பள்ளியை நோக்கி சென்ற போது, சிலிண்டர் வாகனமும், பள்ளி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. பள்ளி வேனின் முன் கண்ணாடி முழுமையாக உடைந்தது. ஆனால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த வழியாக வந்த சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் ஆகியோர் குழந்தைகளை அழைத்து தனது வாகனத்தின் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர் . இச்செயல் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.