• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்த கணவன் – சந்தேகத்தால் ஏற்ப்பட்ட விளைவு…

குருந்தங்குடியில் மனைவி மீது கணவருக்கு சந்தேகம் விளைவு இன்று மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருவாடானை தாலுகா குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சுகந்தி என்னும் சாந்தா என்பவருக்கும் திருமணமாகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவர் ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். மனைவி சாந்தா சிவகங்கை மாவட்ட பகுதியில் அங்கன்வாடி உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் இருந்து ரமேஷ் ஊருக்கு வந்து 5 மாதங்களான நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் மனைவி சாந்தா கோபித்து கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிள்ளைகளை ரமேஷ் கவனித்து வந்துள்ளார். பெற்ற பிள்ளைகளை பார்க்க அனுமதிக்காத நிலையில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில பேசி இருவருக்குமிடையே இருந்த மன வருத்தத்தைப் போக்கி சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ரமேஷ் தனது மனைவி தூங்கிக் கொண்டிருந்தவர் மீது கோடாரியை கொண்டு துடிதுடிக்க வெட்டி கொலை செய்தார். சாந்தா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

பின் ரமேஷ் இரண்டு சக்கர வாகனத்தில் அங்கிருந்து பேருந்து நிறுத்தம் வந்து பைக்கை நிறுத்தி விட்டு பேருந்தில் ஏறி திருவாடானை காவல் நிலையத்திற்கு வந்து தகவலை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், ஆய்வாளர் சீனிவாசகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது சாந்தா கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்தார். காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.