வருகிற 15ஆம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு, இன்று நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பொங்கல் திருவிழா கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.ரவி ஏற்பாட்டில் பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வேளாண்மை இணை இயக்குனர் ஜே. சேகர் (மயிலாடுதுறைமாவட்டம்), நாகப்பட்டினம் மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் ஜி.காமராஜ் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கி பொங்கல்விழாவை சிறப்பித்தனர்.
இதில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகபணியாளர்கள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
