• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை நகரில் புதிதாக உருவான ஜெபி.சினிமாஸ்..!

ByG.Suresh

Jan 8, 2024
சிவகங்கை நகரில் புதிதாக உருவாகும் ஜெபி.சினிமாஸை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
சிவகங்கையை சேர்ந்த  பசும்பொன் குழுமம்  நிறுவனத்தலைவர் சிங்கப்பூர்  தொழில் அதிபர் பாலமுருகன்,ஜெயலெட்சுமி,  இவர்களால் உருவாக்கப்பட்ட ஜெபி சினிமாஸ் திரையரங்கத்தினை சிவகங்கை பஸ்நிலையம் முன்பு  சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், குத்துவிளக்கு ஏற்றி  முதல் டிக்கெட் விற்பனையை தொடங்கி வைத்தார். காரைக்குடி நடராஜ திரையரங்கம் அருணச்சலம் பெற்று கொண்டார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பசும்பொன் குழுமம் சிங்கப்பூர் பொதுமேலாளர் புகழேந்தி திரையரங்க ஒப்பந்ததாரர் செந்தில்குமார்  செய்திருந்தனர். விழாவில்  நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், பிஜேபி மாவட்ட தலைவர் சத்தியநாதன்,  திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரியமாணிக்கம் பசும்பொன் தேவர் மக்கள் அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன், காவல் துறை உதவி ஆணையாளர் சிதம்பரம் முருகேசன், கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், திமுக ஒன்றிய செயலாளர் மதியரசன் சிவகங்கை சமஸ்தானம் மதுராந்தகி நாச்சியார்,இளைய மன்னர் மகேஷ்துரை, கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ், திமுக அவைத்தலைவர் தமிழரசன்,  சுஸ்மா சினி ஆர்ட்ஸ் அழகர்சாமி, அதிமுக நகர செயலாளர் ராஜா ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கோபி, பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகராஜன்மாறன் பில்டர்ஸ் ஆனந்த் மற்றும் பல்வேறு கட்சியின் சமுக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்