• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

1970-71 ஆம் ஆண்டில், 10 – ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு..,

ByKalamegam Viswanathan

Jan 7, 2024

1970 – 71 ஆம் ஆண்டில், 10 – ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு – அனைவரும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆவர் – இவர்களில் அரசு சார்பு துறை மற்றும் வணிகத்துறை , வங்கித்துறை உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களாகவர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பி கே என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 1970 - 71 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்கள், 10 - வது ஆண்டு சந்திப்பு சங்கமம் என்ற நிகழ்ச்சியில், ஒன்று சேர்ந்தனர்.
இந்த சந்திப்பு சங்கத்தில் இப்பள்ளியில், 10 -ம் வகுப்பில் பயின்ற 70 பேர் ஒரே இடத்தில் ஒன்றுகூடி, தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன், ஒருவருக்கொருவர் படிப்பில் முன்னேறி உள்ளதையும், தெரியப்படுத்தினர். இந்த சந்திப்பு சங்கமம் பத்தாவது ஆண்டாக தொடர்வதாகவும், இதன் மூலம் தங்களுக்குள் ஏற்படுகின்ற நட்பு மென்மேலும் பெருகி வருவதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இவர்களில் அரசு சார்பு துறை மற்றும் வணிகத்துறை, வங்கி துறைகளில் முக்கிய பதவிகளில் பதவியேற்று ஓய்வு பெற்றவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் அனைவருமே பேரன், பேத்தி எடுத்து 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டு நிகழ்ச்சி சங்கமத்தின் போது ஒன்று சேர்ந்து அனைவரும் குருப் போட்டோ எடுத்துக்கொண்டு, தங்களது இல்லத்திற்கு எடுத்துச் செல்வர்.