மத்திய வன பாதுகாப்பு ஆணையம் போதிய இடவசதி இல்லை என கோவை வ. உ. சி பூங்காவுக்கு உரிமம் ரத்து செய்தது. இதனை அடுத்து கடந்த மாதம் கோவை வ. உ. சி உயிரியல் பூங்காவில் இருந்து பெலிக்கான் மரநாய், குரங்கு, பாம்பு முதலை உள்ளிட்ட உயிரினங்கள் வண்டலூர் மற்றும் வேலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது கோவையில் உள்ள வ. உ. சி பூங்காவில் நாகப்பாம்பு 10 கண்ணாடிவிரியன் 3 சாரைப்பாம்பு 4 ஆகியவை பெட்டிக்குள் அடைத்து
வனத்துறை வாகனம் மூலம் கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் அந்த பாம்புகளை சிறுவாணி வனப்பகுதியில் கொண்டு சென்று அங்கு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாம்பை அவர்கள் பெட்டிக்குள் அடைக்கும்போது அந்தப் பாம்புகள் மிகவும் கோபத்துடன் சீறியது குறிப்பிடத்தக்கது.
