• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி.., சுகுணா மண்டத்தில் கோலாகலமாக துவங்கியது…

BySeenu

Jan 6, 2024

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி சுகுணா மண்டத்தில் கோலாகலமாக துவங்கியது. ஜனவரி மாத விற்பனை ஷாப்பிங் மேளாவாக துவங்கிய இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள், நகைகள் என பல்வேறு பொருட்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன..

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற , பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் சிறப்பு விற்பனை கண்காட்சியை கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டபத்தில் கோ கிளாம் தமது விற்பனை கண்காட்சியை துவங்கியது. ஜனவரி 5,6,7 ந்தேதி என மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, அம்மா சேவா டிரஸ்ட் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சோனாலி பிரதீப் மற்றும் வழக்கறிஞர்கள் உதயா மேனன், ரேவதி ராஜேஷ், அழகு கரை நிபுணர் ஜெயந்தி, இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் உமையாள், ஜெயந்தி நாராயணசாமி, ரொட்டேரியன் கோதை ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில்,இந்த ஆண்டின் முதல் ,விற்பனை கண்காட்சியாக துவங்கப்பட்டுள்ளதாகவும்,பொங்கல் விடுமுறை மற்றும் முகூர்த்த கால விழாக்களை முன்னிட்டு ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கண்காட்சியில் கொல்கத்தா,லூதியானா,குஜராத், டில்லி,ஜெய்ப்பூர்,புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக ஆடை, ஆபரணங்கள், , குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள், பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள்,பிரத்யேக டிசைனில் உருவாக்கப்பட்ட காலணிகள் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல், வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் இயற்கை முறையிலான அழகுக்கலை பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள், முக அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றிற்கு தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஜனவரி மாத முதல் வார மூன்று இறுதி நாட்கள் நடைபெற உள்ளன. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.