• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்…..

ByKalamegam Viswanathan

Jan 4, 2024

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் 16 பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும் காவலர்களிடமிருந்து 14 மனுக்கள் பெறப்பட்டு, இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் உத்தரவிட்டார்.