• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் நகராட்சி குடிநீரேற்று குடோனில், இரும்பு குழாய்களை திருடியவர் கைது…..

ByKalamegam Viswanathan

Jan 4, 2024

விருதுநகர் நகராட்சி பகுதியான ராமமூர்த்தி சாலையில், மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ளது. அங்கு பழைய பொருட்களை இருப்பு வைக்கும் குடோனும் உள்ளது. நகராட்சியில் கேங்க் மஸ்தூராக வேலை பார்த்து வரும் முனியாண்டி (56) அங்கு வந்த போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (41) என்பவர் இரும்பு குழாய்களை திருடி ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்தப் பகுதியில் இருந்தவர்களின் உதவியோடு, குழாய்களை திருடிய முத்துப்பாண்டியை பிடித்து, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், குழாய் திருட்டில் ஈடுபட்ட முத்துப்பாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.