நாகை மாவட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், காவல்சீருடையில் பா.ஜ.க.வில் இணைந்த இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
“என் மண், என் மக்கள்” என்ற பெயரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை 234 தொகுதிகளிலும் மக்களிடம் விளக்கும் வகையில் இந்த நடைபயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின்போது காவல்துறை சீருடை அணிந்து 2 காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
காவல் சீருடையில் பாஜகவில் இணைந்த அதிகாரிகள் சஸ்பெண்ட்..!
