• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவை – புனித மைக்கேல் தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை

BySeenu

Jan 1, 2024

புத்தாண்டை முன்னிட்டு கோவையில் கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டு இன்று உற்சாகமாக கொண்டாடபட்டது.

அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது குறிப்பாக கோவை ஸ்மார்ட் சிட்டி வாலாங்குளம் பகுதியில் வண்ண லேசர் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டு ட்ரோன் கேமராக்கள் கொண்டு புத்தாண்டு வாழ்த்து பகிரபட்டது.

இதே போல் கோவையில் உள்ள பல்வேறு கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

குறிப்பாக கோவை புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு யேசுவின் முன்னால் மண்டியிட்டு மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.

இதனையடுத்து இப்பேராலயத்தின் தென் மண்டல பேராயர் தாமஸ் அக்வினாஸ் திருப்பலி நிகழ்ச்சியை நடத்தியதுடன் அனைவருக்கும் புதிதாக பிறந்து இருக்கும் இந்த ஆண்டு அனைவருக்கும் நோய் நொடியின்றி எல்லா வளமும் நலமும் பெற்று இருக்க வேண்டுமென்று கூறி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.