• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

விரைவில் ஓடிடி தளத்தில் பார்க்கிங் படம் ரிலீஸ்..!

Byவிஷா

Dec 29, 2023

சமீபத்தில் வெளியாகி மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023ஆம் ஆண்டின் இறுதிக் கொண்டாட்டங்களை இனிமையாக்கும் வகையில், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் அதிரடி டிராமா திரைப்படமான ‘பார்க்கிங்’ திரைப்படத்தை டிசம்பர் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தங்கள் வீட்டின் முன் வாகனம் நிறுத்தும் இடத்திற்காக சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு மனிதர்களைச் சுற்றி நிகழும், ஒரு இறுக்கமான, மிக யதார்த்தமான கதையைச் சொல்கிறது. ஒரு அழுத்தமான கதையை பொழுதுபோக்கு வகையில் அழகாக சொல்லியுள்ள இந்தப் படம், பார்வையாளர்கள் தங்கள் வாழ்வில் நிச்சயம் சந்தித்திருக்கும் இதே போன்ற நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையில், மிக அற்புதமான படைப்பாக அமைந்துள்ளது.