தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் பெரியாரிய உணர்வாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது சிலைக்கும், படத்திற்கும் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பெரியாரிய அமைப்புகள், பெரியார் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு.இராமகிருட்டிணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
