• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சதுரகிரி கோவில் செல்ல பக்தர்களுக்கு தடை

Byவிஷா

Dec 23, 2023

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்கு செல்லும் பாதைகளில் ஓடைகள் உள்ளன. இந்நிலையில் சாப்டூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு, நாளை (24.12.2023 ஞாயிறு) பிரதோஷம் மற்றும் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு, பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். விருதுநகர் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி இந்த தடை அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்.