• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் பழமைவாய்ந்த சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்டெடுப்பு…

ByP.Thangapandi

Dec 22, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஓட்டைக் கோவில் என அழைக்கப்படும் சிவன் கோவில்., சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கோவிலை தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவிலை புரணமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பழமையான இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஒரு சில ஆக்கிரமிப்புகளையும் அரசு அதிகாரிகளின் உதவியோடு அகற்றம் செய்துள்ள சூழலில் கோவில் நிலங்களை பாதுகாக்கும் வண்ணம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோவில் நிலங்களை மீட்டெடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவின் பேரில் இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், காவல்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களை முழுமையாக அளவீடு செய்து நான்கு மால் அமைத்து கொடுத்தனர்.

தொடர்ந்து இந்த கோவிலுக்கு சொந்தமான பகுதிகளை பாதுகாக்கும் வண்ணம் சுற்றுச்சுவர் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.