• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி இறக்க மதுரை காவல்துறை சார்பாக தனி இடம்..,

ByKalamegam Viswanathan

Dec 21, 2023

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின்‌ சார்பில்‌ நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ உரிமையாளர்களுக்காக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில்‌ ஆட்டோக்களால்‌ பொதுமக்களுக்கும்‌,
போக்குவரத்திற்கும்‌ ஏற்படும்‌ இடையூறுகளை குறைக்கும்‌ விதமாக ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி இறக்க பேருந்து நிறுத்தங்களில்‌ தனி இடம்‌ அமைத்து தருமாறு கூறப்பட்டிருந்தது. அதன்‌ முதற்கட்டமாக இன்று தெப்பக்குளம்‌ போக்குவரத்து காவல்‌ நிலைய எல்கைக்கு உட்பட்ட 6-இடங்கள், திலகர்திடல்‌ போக்குவரத்து காவல்‌ நிலைய எல்கைக்கு உட்பட்ட 2-இடங்கள் மொத்தம்‌ 8 நிறுத்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களும்‌ ஆட்டோ ஓட்டுனர்களும்‌ பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு மதுரை மாநகர
காவல்துறையின்‌ சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றது.