• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு துறை இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை இல்லை… முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பல்லாவரத்தில் பேட்டி..,

Byஜெ.துரை

Dec 15, 2023

போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க, காலையில் 1 மணி நேரம் ஓட வைக்க வேண்டும். விளையாட்டு துறையில் ஆர்வம் வந்தால் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள். முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பல்லாவரத்தில் பேட்டி..,

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனியார் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய சைலேந்திரபாபு தனியார் பாதுகாவலராக பணிபுரியும் பணியாளர்கள் காவல் துறையினருடன் நன்கு பழக வேண்டும் என்றும், குற்றங்களை தடுக்க மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

பின்னர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் போதை பொருளை சமுதாயத்தில் அதன் தேவையை குறைக்க ஆசிரியர்கள் பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும், இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் விளையாட்டு துறையில் ஈடுபடுத்தினால் மாணவர்கள் போதையில் இருந்து வெளி வருவார்கள் எனவும் தெரிவித்தார்.