தென் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற நகை விற்பனை நிறுவனமான கேப்ஸ் கோல்டு நிறுவனம் சார்பில், கலாஷா பைன் ஜூவல்ஸ் தங்க நகை கண்காட்சி கோவையில் இன்று முதல் 16-ந் தேதி வரை கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஹோட்டலில் நடைபெறுகின்றது.
கோவை ரெசிடென்சி ஓட்டலில் நடைபெறும் இந்த கண்காட்சியில் மணப்பெண்களுக்கான நகைகள், கைவினை அலங்கார நகைகள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திருமண நகைகள், தங்கம், வைரத்தால் வடிவமைக்கப்பட்ட நகைகள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. நகை ஆர்வல மங்கைகளுக்கு பிரமிப்பை ஊட்டும் இந்த கண்காட்சியில் திருமதி அபர்ணா சுங்க் சிறப்பாக கண்காட்சியாக வடிவமைத்துள்ளார்.
இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக நிகிதா விஷா, பிரசன்னா விஸ்வநாதன், செல்வி நிரூபனா நடராஜன், டாக்டர் ஸ்வேதா ஸ்ரீதர், கீதா சவுந்தரராஜ் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.
