• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 100% ஆயுட்கால வரி உயர்வை திரும்ப பெற, கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

BySeenu

Dec 12, 2023

கோவையில், பொது போக்குவரத்து மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 100% ஆயுட்கால வரி உயர்வை கண்டித்தும் பழைய காலாண்டு வரி விதிப்பை அமல்படுத்த வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் தமிழகத்தில் இயங்கக்கூடிய பழைய பொது போக்குவரத்து மோட்டார் வாகனங்களுக்கு 100% ஆயுட்கால வரி என்பதை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை திரும்ப பெற வலியுறுத்தியும் பழைய காலாண்டு வரி விதிப்பை அமல்படுத்த வலியுறுத்தியும் கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோட்டர் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் உட்பட LPF, CITU, AITUC, MLF, BMS என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

கொரோனா தொற்று, புதிய மோட்டார் வாகனத்திற்கு சட்டம், விலைவாசி உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் விலை உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வு என பலவற்றால் பாதிக்கப்பட்டு வாகனத் தொழில் நலிவடைந்து வரும் நிலையில் தற்போது தமிழக அரசு அமல்படுத்தியுள்ள இந்த 100% ஆயுட்கால வரி உயர்வு தங்கள் தொழிலை மேலும் நலிவடைய செய்யும் எனவும் எனவே தமிழக அரசு உடனடியாக இதனை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.