• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம்பெற்று வீடு திரும்பியதை முன்னிட்டு..,சிங்கை மேற்கு பகுதி தேமுதிகவினர் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்..!

BySeenu

Dec 11, 2023

தேமுதிக தமிழகத்தின் தன்னிகரில்லாத நேர்மையான தலைவர் மனிதரில் புனிதர் மாண்புமிகு கேப்டன் அவர்கள் உடல் நலம் பெற்று வீடு திரும்பியதற்க்காக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே சந்துரு தலைமையில் சிங்காநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் கேப்டனின் அன்பு தம்பி அழகர் ஆர் செந்தில் அவை தலைவர் ராமன் பொருளாளர் சுரேஷ் ஆகியோர்களின் ஏற்பாட்டில் 59 வது வட்டக் கழக செயலாளர் அண்ணாதுரை மற்றும் அனைத்து நிர்வாகிகளின் சார்பாகவும் கோவை வரதராஜபுரம் மேடு அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்த கோடிகளுக்கும் பொது மக்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து உப்பிலிபாளையம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீர், இளநீர் ஆகிய அபிஷேகப் பொருளைக் கொண்டு சிறப்பான முறையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அனைத்து நிர்வாகிகள் சார்பாக பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி வனிதா துரை மாநகர் மாவட்ட பொருளாளர் ராகவ லிங்கம் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சிங்கை கோவிந்தராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கருப்பு துரை, பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிங்கை குணா, பகுதி கழக துணைச் செயலாளர் சரவணன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், தொழிற்சங்க நிர்வாகி நீனா வேலுச்சாமி, தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் வடிவேலு, 54 வது வார்டு கழக செயலாளர் குமரவேல், 59 ஆவது வார்டு கழகச் செயலாளர் அண்ணாதுரை ஆறுமுகம், சிவகுமார், ராஜேந்திரன், சுப்பிரமணி, விக்னேஷ், சசிகலா ராஜன் பரத் 53வது வட்டக் கழக சார்பாக பாண்டி, 60வது வட்டக் கழகத்தின் சார்பாக சக்திவேலு, வடிவேலு, தங்கவேல் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

என்றும் தலைவரின் வழியில் சிங்கை கே சந்துரு மாவட்ட கழக செயலாளர் கோவை மாநகர் மாவட்டம்