• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சென்னை வெள்ள நிவாரணப் பணி; மருத்துவக் குழுவுடன் களமிறங்கிய ஈஷா!

ByKalamegam Viswanathan

Dec 9, 2023

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொழிந்த அதிகனமழை காரணமாக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஈஷா மருத்துவக் குழு வழங்கி வருகிறது.

இதற்காக கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து ‘ஈஷா அவுட்ரீச்’ சார்பில் நடமாடும் மருத்துவ வாகனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் சென்னை சென்றடைந்தனர்.

இவர்கள் மூன்று மருத்துவ குழுக்களாக இயங்கி, வட மற்றும் தென் சென்னையின் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இது தவிர 3 நடமாடும் மருத்துவ வாகனங்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலவேம்பு குடிநீர் தினமும் தயார் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஈஷா யோக மையம் இதற்கு முன்பு 2004 – இல் ஏற்பட்ட சுனாமி, 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளம், கஜா புயல் மற்றும் 2020 – ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களினால் பாதிக்கபட்ட மக்களுக்கு அப்பொழுது தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் பிற நிவாரண உதவிகளை பெருமளவில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.