• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பள்ளிகளில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த செயல்முறை விளக்கம்…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை மூலமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

தீயணைப்பு துறை நிலைய அலுவலர் நல்லதுரை மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவது என விளக்கம் அளித்தார். இதனைத்தொடர்ந்து பட்டாசுகள், நிலபுருசுகள் உள்ளிட்ட பட்டாசுகளை எவ்வாறு வெடிப்பது என தீயணைப்புத் துறையினரால் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து கேட்டு பயனடைந்தனர்.