• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்படுமா..?

Byவிஷா

Dec 6, 2023

கனமழை காரணமாக இன்றும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரையாண்டுத் Nதுர்வு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நாளை முதல் தொடங்கி நடைபெற உள்ளதாகவும், 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 11-ந்தேதி முதல் ஆரம்பித்து நடத்தப்பட இருப்பதாகவும் அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் சென்றுவிட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்புகளில் இருக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நிவாரண முகாம்களாகப் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடிந்து, இயல்பு நிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும்.
நாளை, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்க உள்ள நிலையில், அந்த தேர்வு தள்ளி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் ஒப்புதல் பெற்றவுடன், அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.