• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை விமான நிலையம் வந்த, இந்து மகா சபா தமிழ்நாடு புதிய தலைவருக்கு உற்சாக வரவேற்பு…

BySeenu

Dec 5, 2023

அகில பாரத இந்து மகா சபா தலைவராக நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பல்வேறு இந்து அமைப்பினர் உற்சாக வரவேற்பு வழங்கினர்..இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய ஆன்மீக பணியை பார்த்து இந்த பொறுப்பை வழங்கி உள்ளதாக கூறினார். மற்ற கட்சி ஆதரவு நிலைபாட்டை தம்முடைய மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு என்றும்,,ஆன்மீக பணிகளில் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும்,தாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆன்மீக பணியில் முழு கவனம் செலுத்தி ஆன்மீகத்தை வளர்க்க உள்ளதாக கூறினார்..தாம் மேட்டூரில் கட்டி வரும் சிவசங்கர ஆலயம் விரைவில் கட்டி முடிக்கப்பட உள்ளதாக கூறிய அவர்,இந்துக்களிடம் ஆன்மீக பணிகள் விழப்புணர்வை அதிகபடுத்துவேன் என தெரிவித்தார்.