• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சுருளி வேலப்பர் கோவிலில் விஜயகாந்த் உடல்நலம் வேண்டி தொண்டர்கள் சிறப்பு பூஜை…

ByPandikumar

Dec 3, 2023

பிரபல திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயகாந்தின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டி அவரது சினிமா ரசிகர்கள் அரசியல் கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தீவிரமாக இறைவனை பிரார்த்தித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு சுருளி வேலப்பர் திருக்கோவிலில் இன்று கேப்டன் விஜயகாந்தின் உண்மை தொண்டர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

விஜயகாந்தின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டுமென முருகன் சன்னதியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரில் பூஜை மேற்கொண்டு கோவில் பரிகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்தும் மனம் உருகி வேண்டிக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் விஜயகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.