• Mon. May 20th, 2024

கலைஞர் நகர்ப்புற வளர்சித் திட்டத்தின் கீழ்,வளர்ச்சிப் பணிகள் – சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்…

ByPandikumar

Dec 5, 2023

தேனி மாவட்டம் சின்னமனூரில் கலைஞர் நகர்ப்புற வளர்சித் திட்டத்தின் கீழ் செய்த வளர்ச்சிப் பணிகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகளில் சுமார் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

நகரில் வசிக்கும் பொது மக்களின் வசதிக்காக கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையம், சங்கிலிகுளம், விசுவன்குளம், பகுதிகளில் நடை பயிற்சி மேடை மற்றும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை 7 கோடி மதிப்பில் செய்து முடித்திருந்தனர்.

இந்த பணிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக தொடக்க விழாவினை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடத்தினார்கள்.

விழாவில் அனைத்து புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்ததுடன் மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்கள். நிகழ்ச்சியில் சின்னமனூர் நகர் மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு நகராட்சி ஆணையாளர் கோபிநாத் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *