குமரி மாவட்டம் இயல்பாகவே சித்தா மற்றும் மரபு சார்ந்த வழியில் வைத்தியர்களை கொண்ட மாவட்டம். டார்ன் ஹீலிங் கண்டு பிடித்த மருத்துவ முறை இன்றைய சமுகத்திற்கு எப்படி பயன் படுகிறது என துறை சார்ந்த மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் மிக மனம் திறந்த பேச்சில் அவரது குடும்ப உறுப்பினர்கள். மருமகன், மகள், பேரன், அரசியல்வாதி உணவில் தினமும் சந்திக்கும் அன்புத் தொல்லை எல்லாம் பற்றி மனம் திறந்தவர்.
இந்திய அரசியல் சட்டத்தின் உருவாக்கிய டாக்டர் அம்பேத்கருக்கும் உடன் இருந்தவர்களுக்கும்.ஆர்ட்டிக்கல் 1- பற்றிய கருத்து வேறுபாடுகள் அப்போதே இருந்தது.
இந்தியா அதாவது பாரத்,யூனியங்களால் ஒன்றிணைந்த மத்திய அரசு, இந்தியா என்பதை இப்போதைய அரசு பாரத் என்று மாற்ற முயன்று முடியாமல் போய்விட்டது. நாட்டுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அரசியல் பேசவில்லை உண்மை நிலையை சொல்லுகிறேன்.

எதிர் கட்சி தலைவரிடம் நான் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கும் என சொன்னபோது, அவர் என்னப்பா இப்படி பேசுகிறாய் என கேட்பார்.
இன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதி மிகுந்த நேர்மையானவர். இவரது தாத்தா, அதற்குப்பின் இவரது தந்தை, இப்போது இவர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி.
நேற்று முன்தினம் இவர் தெரிவித்த கருத்து. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே அதிகாரம் பெற்றது என்ற கருத்து.

சட்டம் இப்படி இருக்கும் போது மாற்றி செயல் பட்டால் சிந்தனை அற்றவர் என்பதே உண்மை என வெளிப்படையாக தெரிவித்தவர்.
இன்று நாட்டில் இருக்கும் பல்வேறு நிலைகளுக்கு காரணம் கட்டுப் பாடு அற்ற மக்கள் பெருக்கம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மார்த்தாண்டம் சீரோ மலங்கரை கத்தோலிக்க பெருநகர ஆயர் அருட்பணி முனைவர். வின்சென்ட் மார் பவுலோஸ், இந்தியாவின் முதல் டார்ன் ஹீலிங் பயிற்றுவரான டாக்டர். சுபாஷ் மணி, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர். இராபர்ட் சிங், டாக்டர். டேனியல் தேவ சுதன், ISRO ஓய்வு பெற்ற விஞ்ஞானி புதியவன்,இவர்களுடன்.
இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த 180_க்கும் மேற்பட்ட டார்ன் சிகிக்சை நிபுணர்களும் பங்கேற்றனர்.
