• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

லஞ்சம் வாங்கிய சர்வேயர்க்கு 3 ஆண்டு சிறை – 13 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு…

ByG.Suresh

Nov 30, 2023

நிலத்தை சப் டிவிஷன் செய்து பட்டா வழங்குவதற்கு 1500 லஞ்சம் வாங்கிய சர்வேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா டெப்டி சர்வேராக பணிபுரிந்தவர் ஆறுமுகம் (62) இவரிடம் எஸ்வி மங்கலத்தைச் சேர்ந்த ராதா (58) என்பவர் தங்களுடைய பூர்வீக இடத்தை அளந்து சப் டிவிஷன் செய்து பட்டா வழங்கும் படி கேட்டு விண்ணப்பித்தார்.
இந்த பணியை செய்வதற்கு ரூ ஐந்தாயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று ஆறுமுகம் கேட்டார். இதில் முதல் கட்டமாக ரூ1500 தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். பணம் தர விரும்பாத ராதா. இது குறித்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் அவர்கள் ஏற்பாட்டின் பேரில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி ராதா ரசாயன பவுடர் தூவப்பட்ட பணத்தை ஆறுமுகத்திடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பணத்துடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ஆறுமுகத்தின் மீது சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தில் முரளி குற்றம் சாட்டப்பட்ட டிப்டி சர்வேயர் ஆறுமுகத்திற்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் ரூ 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.