• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விஜயகாந்த் பூரண குணமடைய, திருமுருகன் கோவிலில் பால் அபிஷேகம்.., தேமுதிக நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு…

ByP.Thangapandi

Nov 30, 2023

நுரையீரல் பிரச்சினை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டியும், மீண்டும் கம்பீரத்துடன் செயலாற்ற வேண்டியும் தேமுதிக மதுரை மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேமுதிக நிர்வாகிகள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவிலில் பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கரிமாத்தூர்பாண்டி, எம்எஸ்மாணிக்கம், வில்லாணி செல்வம், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சமுத்திரபாண்டி, சேடபட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், செல்லம்பட்டி ஒன்றியசெயலாளர் சிவபிரகாஷ், உசிலம்பட்டி நகரச்செயலாளர் அசோகன், எழுமலை பேரூர் கழகச் செயலாளர் சேகர், முனியாண்டி, தங்கப்பாண்டி, ராமசாமி, ஆண்டிச்சாமி, முத்துகருப்பன், மூக்கன், மொக்கைச்சாமி, ராமர், அழகுராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.