• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு… மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு…

ByG.Suresh

Nov 28, 2023

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளி பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் சகோ. இக்னேஷியல் தாஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கன் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாடினார். அப்போது வாகனங்களை இயக்கும் போது பாதுகாப்பாக, விபத்தில்லாமல் ஓட்டுவது எப்படி என்பது குறித்து கலந்துரையாடினார். வேகக் கட்டுப்பாடு என்பது விபத்தினை குறைக்க உதவும், அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். பெற்றோருடன் செல்லும்போது அவர்களை சாலை விதிகளை கடைபிடிக்க கூற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விரிவாக எடுத்துரைத்தார். இதனை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். பின்னர் மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம், பள்ளி தாளாளர் சகோ. இக்னேஷியல் தாஸ் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.