கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள கோவை மாநகராட்சியின் ஹாக்கி மைதானத்தில் கழிவு நார் குப்பைகளை யாரோ வீசி சென்றுள்ளனர்.
இன்று காலை அதில் கழிவு எண்ணெயுடன் இருந்த நாற்கழிவு தீப்பிடித்துள்ளது. இதனால் பகுதி முழுவதும் கரும் புகைமூட்டம் நிலவியது.
தகவல் அறிந்து வந்த கோவை மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாநகராட்சி மைதானத்தில் கழிவுகளை கொட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.