• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வாகனம் தங்கும் விடுதிகளில் சிறப்பு சோதனை…

ByKalamegam Viswanathan

Nov 20, 2023

மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மற்றும் தங்கும் விடுதிகள், மேன்ஷன்களில் சிறப்பு சோதனையினை (10.11.2023)இரவு 17.00 மணி முதல் (12.11.2023) இரவு 20.00 மணி வரை மேற்கொண்டனர்.

இந்த சிறப்பு சோதனையில் தலைமறைவில் இருந்து தேடப்பட்டு வந்த பழைய குற்றவாளிகள் 24 பேர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். வரலாற்று குற்ற பதிவேடு கொண்ட குற்றவாளிகள் 85 நபர்களை சோதனை செய்ததில் அவர்களின் குற்ற செயல்கள் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது . கஞ்சா விற்பனை தொடர்பாக நடைபெற்ற சோதனையில் 14 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 0.617 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.6170 /- தொகையும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குடிபோதையில் வாகனங்கள் இயக்கியதற்காக 107வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 83 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.