• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சார்பில், MLA வின் மக்கள் தீபாவளி கொண்டாட்டம்..!

ByNamakkal Anjaneyar

Nov 12, 2023

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் கடந்த ஆண்டு ஆரம்பித்து தீபாவளிக்கு முந்தைய தினம் மக்களுடன் தீபாவளி என்ற நிகழ்ச்சியை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நடத்தி வருகிறார். அதன்படி இரண்டாவது ஆண்டாக வேலூர் ரோடு விவேகானந்தா திடலில் மக்களுடன் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் வாண வெடிகளை கொளுத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் நகர செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் அசோகன் கொள்கை பரப்புச் செயலாளர் நந்தகுமார் உள்ளிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் ஒரே இடத்தில் வெடிக்கப்பட்டது. வானத்தில் வண்ணப் பூமழையாய் வாண வெடிகள் வண்ண வண்ணமாக சிதறியதை பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர் வெடிகள் வெடிக்கப்பட்டது சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.