• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தல தீபாவளியை கொண்டாடி வரும் புதுமண தம்பதிகள் – புது உறவுகளுடன் தீபாவளியை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிப்பு…

BySeenu

Nov 12, 2023

இன்றைய தினம் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து கோவில்களுக்குச் சென்றும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோவையிலும் அதிகாலை முதலே தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக புதுமண தம்பதிகள் அவர்களது தல தீபாவளியை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். புதுமண தம்பதிகள் பெரியவர்களிடம் ஆசி பெற்று பெரியவர்கள் எடுத்து தந்த புத்தாடையை அணிந்து கடவுளை வழிப்பட்டு பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இது குறித்த அவர்கள் கூறுகையில், புது உறவுகளுடன் தீபாவளியை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். மேலும், தல தீபாவளி கொண்டாடும் அனைத்து புது மண தம்பதிகளுக்கும் அவர்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.